
எல்லா நாவல்களுக்கும் ஒரு காட்சித் தோற்றம் கற்பனையில் விரிவதுண்டு. இந்நாவலிலோ எனக்கு சாயங்கால மங்கிய நீல வண்ணமும், இளஞ்சிவப்பு விடியலுமாக ஒரு மங்கிய இளகிய இருள் முளைக்கும் அந்தி வண்ணம் தோன்றியது. அந்திக்கே உரிய ஏக்கம், கனவு, களிவிரக்கம் என அதற்கான உணர்வுkazhum கூட.
லாங்பென் ஏரியின் அழகான, மிக நுண்ணிய விவரிப்புகளுடன் அதை சுற்றிய பண்ணைகள் என கதைக்களம் விரிகிறது.
கதை மாந்தவர்கள் நிரம்பி வழிகின்றனர். வாழ்வின் meimaiyai எதன் மூலம் அறிய முடியும். இசையால், வீரத்தால், மதத்தால், காதலால், அழகிய குடும்பத்தால், அறிவால், இவற்றின் உச்சம் தொட்டும், verumaiyal துரத்தப்படும் உல்லாசப் புருஷர்களும், காதலை தவறவிட்ட, விட்டுக் காடுத்து ஏற்க முடியாது தவிக்கும் பெண்களின் கோபம், தியாகம், கழிவிரக்கம், என தொடரும் மார்கரீட்டா, அன்னா, எலிசபெத் என முக்கிய பெண் கதை மாந்தவர்களுடன், இந்நாவல் தொடர்கிறது.

கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தின் அஸ்திவாரமாக இருக்கக் கூடிய மத உணர்வுகள், கலாச்சாரம் போன்றவற்றால் நசுக்கப்பட்ட உணர்வுகளுக்காக மனிதனின் முக்கியமாக பெண்களின் தரப்பில் நின்று மதக்கோட்பாடுகளையும், ஞானம், அறிவின் தேடல்கள் மூலம் கிடைக்காத வாழ்வின் மெய்மையை மனித குலத்தின் அறியாமையின், கள்ளங்கபடமற்ற அன்பின் மூலம் உல்லாச புருஷர்களான ஞானிகளிடமும் கேள்வி கேட்கிறது இந்நாவல்.
உண்மையில் வாழ்வின் சாரம் என்ன என்ற கேள்விகளுடன் முன்னகர்கிறது நாவல்.
எல்லா தேனீக்களும் திரும்பி வரவில்லை என்றாலும், இறுதி அழைப்பை எதிர்நோக்கும் ராணி தேனீக்கும் அதன் வாயிலின் உண்மைக்கும் இடையே ஆன பாதை என நீள்கிறது வாழ்வு. அதில் கலை, அறிவு, காதல், உழைப்பு, இறை என எதை வேண்டுமானாலும் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்….

உமா மகேஸ்வரி, கோவை