கொரானா கால சந்திப்புகள் – 4

இந்த கதையை வாசிக்க தொடங்கும் போது, Quarantine ஆல் பாதிக்கப்பட்ட வெளி மாநில வேலை ஆட்கள் இந்திய நெடுஞ்சாலை எங்கும் எந்த வித எதிர்ப்பு உணர்வும் இல்லாமல் நடந்தே சென்றதை காண நேர்ந்தது. அதில் ஒரு நிகழ்வு, சாலையில் அடிபட்டு செத்து கிடக்கும் நாயை ஒரு மனிதன் தின்கிறான். இன்னொரு நிகழ்வு, நடந்த அயர்ச்சி யில் இரயில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 10-15 பேர் மேல் இரயில் நசுக்கி சென்றது.
“Migrant woes are ‘Greatest ManMade Tragedy’ in India since Partition: Ramchandra Guha”
எல்லா சமூக சீரழிவுகளிலும் தனது நிலைப்பாட்டை சொல்வது படைப்பாளியின் படைப்பு தன்மையை பாதிக்கும் என்ற கருத்தின் மேல் எப்போதும் சந்தேகம் கொண்டிருக்கிறேன்.
அதை வலுப்படுத்தும் விதமாகவே தாமஸ் மன்னின் எழுத்துலகமும், நாஜிக்களுக்கு எதிராக அவர் தொடர்ந்த எதிர்ப்பும் அமைந்துள்ளது.
தாமஸ் மன் (Thomas Mann) நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர்.Budden Brooks,The Magic Mountain, Death in Venice’ ஆகியன இவருடைய முக்கியமான படைப்புகள்.நோய் குறித்து எழுதப்பட்ட உலக இலக்கியங்களில் (The Plague,Cancer Ward,The Bell Jar,ஆரோக்கியநிகேதனம்) இவரது The Magic Mountain முக்கியமான இடத்தை வகுக்கிறது.
இவருடைய படைப்புகளில் நீட்ஷே,ஷோஃபனரருடைய தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இவருடைய டைரி குறிப்பு, Death In Venice’ ன் காதாப்பாத்திரத்தின் இயல்பு கொண்டு இவர் ஓர் ஓரிணைசேர்க்கையாளராக கருதப்படுகிறார்.
Listen German! என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாஜிக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை பேசி வந்திருக்கிறார்.
ஹெர்மன் ஹெஸ்ஸேவும் ,இவரும் தொடர்ந்து கடித தொடர்பில் இருந்துள்ளனர். இருவருமே இந்திய மரபை வைத்து ஒரு கதை எழுதுயிருப்பது சுவாரஸ்யமான விசயம்.(இருவரும் நோபல் பரிசு பெற்றவர்கள்).
மாறிய தலைகள் (Transposed Head) மனிதனின் இருப்பு (Being) பற்றியும் அவனது ஆசைகள் (Desire) பற்றியும் அது எவ்வாறு மதம், திருமணம் போன்ற அமைப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது போன்ற எக்காலத்திற்குமான சிக்கலை விசாரணை செய்யும் கதையாகும்.
இந்த கதையை சாமதேவ என்பவர் எழுதிய Katha Sarita Sagara லிருந்து தழுவி தாமஸ் மன் எழுதியுள்ளார். தாமஸ் மன்னிலிருந்து கிரிஷ் கர்னாட் ஹாயவதனா (Hayavadana) என்ற பெயரில் நாடகமாக தழுவி இயற்றியுள்ளார். மூன்று கதைகளுமே ஒரே கருவை வைத்து வெவ்வேறு முடிவுகளை சென்று சேர்கின்றன.
சாமதேவ எழுதிய கதையில் விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதையை சொல்லி கேள்வி கேட்கும்.
அந்த கதையில்,
கனவன், மனைவி, மனைவியின் தம்பியும் பயணம் செய்வார்கள்.அப்போது வழியில் காளி கோயிலுக்கு வணங்க செல்லும் கனவன் காளியின் கோர ரூபம் கண்டு தலையை துண்டுத்துக் கொள்கின்றான்.பின்னால் வந்த தம்பியும் பிணத்தை கண்ட அதிர்ச்சியில் தானும் தலையை கொய்து கொள்கிறான்.கடைசியாக இரு பிணங்களை பார்த்த மனைவி தூக்கிட்டு தற்கொலைக்கு எத்தனிக்கும் போது காளி தோன்றி தலையை ஒட்டிக் கொண்டு உயிர்ப்பிக்க அருள் புரிகிறாள்.அவசரத்தில் தலையை மாற்றி வைத்து விடுகிறாள் மனைவி.
கதையை நிறுத்தி ,இப்போது யார் அவளுடைய கனவன் என்ற கேள்வியை கேட்கிறது வேதாளம்.
எந்த பிரச்சினையும் இல்லாமல் விக்ரமாதித்தன், கனவன் தலையை உடையவன் தான் கணவன் என்று கூறி கதை முடிகிறது.
இந்த அடையாளம் சார்ந்த தத்துவ பிரச்சினையை எடுத்து கொண்டுதான் தாமஸ் மன் நவீன கதையாக எதார்த்த மனிதர்களை வைத்து எழுதிப் பார்க்கிறார்.
சாமதேவருடைய கதை ஒரு நீதி கதை என்பதாலும் அது ஏற்கனவே உள்ள மதம் சார்ந்த கருத்துகளை கொண்டுதான் கதை முடிகிறது என்பதாலும் அங்கே தனிமனித உள்ளுணர்வில் தோன்றும் கேள்விக்கு இடமில்லை. அதனால் பிராமணியம் சார்ந்து தலைதான் (Superiority – Bron in bramma head) உயர்ந்தது என்ற கருத்தின் மேல் நாம் விமர்சனம் வைக்க இடம் உள்ளது.
தாமஸ் மன்னின் கதையில் அடையாளம் (Identity) சார்ந்து பிரச்சினையை எழுப்புவதால் Martin Hidegger – ன் Being (“Dasein”) பற்றிய தத்துவம் கொண்டு ஆராயலாம்.
நான் (Being) என்பதை எனது உடல், நான் இங்கே இருக்கிறேன் என்ற உணர்வு ஆகிய அடிப்படையில் Saptial and Temporal ஆக வரையறுக்கலாம்.
சீதைக்கு ஸ்ரீதாமன் மீது ஆசை குறைந்து நந்தன் உடல் மேல் வேட்கை அடைகிறாள். பிறகு புதிய உருவம் பெற்ற கனவுடன் வாழும் வாழ்க்கையிலும் இறுதியில் சலுப்பே அடைகிறாள்.
இங்குதான் Hidegger ன் Being-in-Time பற்றிய கருத்து கொண்டு விவாதிக்கலாம்.

சில கலைச்சொற்களின் பொருள்:
Authenticity – (Set of rules) ஒருவருடைய பழக்க வழக்கம் (ஸ்ரீ தாமன் பிராமண ஆச்சார முறைகளை பின்பற்றி வாழ்பவன், அதுதான் அவனுடைய Authenticity)
PostRefflect- நிகழ்வு நடந்து முடிந்த பிறகு.
ஸ்ரீ தாமன் Authenticity படி அவன் sexual interest ஐ விருமபாதவன்.அதனால் முதலில் சீதையை நிர்வாணமாக பார்த்த போது அதில் தெய்விக தன்மையை பற்றி பேசிகிறான். பிறகு அந்த உடல் குறித்து வேட்கை கொள்கிறான்.
ஒரு நிகழ்விற்கு பிறகு (PostRefflective Period) Being ன் Authenticity மாறும் என்றால் மாறிய தன்மைதான் அதன் Authenticity ஆகும். அப்படி பார்க்கும் போது Being in Time என்பது தொடர்ந்து Past-Present-Future ல் , ஒவ்வொரு புதிய ‘now’ ஐ சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
Lack (குறை) முதலில் தெரிகிறது, அதிலிருந்து Desire உருவாகிறது, Desire ஒரு Completeness நோக்கி நகர்கிறது. Comleteness என்பது நிரந்தரம் இல்லை என்பதால் இதற்கு தீர்வாக Destruction ல் கதை முடிகிறது.
தாமஸ் மன் ‘Nature of Being’ பற்றி பேசிகிறார்.இதே theme ஐ வைத்தே கிரிஷ் கர்னாட் ‘Compeletenss of Being’ பற்றி எழுதி பார்க்கிறார்.
ஒரு வகையில் இந்திய மண்ணிலிருந்து எடுத்த கல்லைக் கொண்டே இங்குள்ள மாபெரும் புனிதமான மலைத்தேன்(சீதை) மேல் எரிந்துள்ளார் தாமஸ் மன்.
Hayavadana (குதிரை தலையை உடையவன்) என்ற நாடகத்தில்,இதே போல் குதிரை தலையை உடையவன் காளி கோவிலில் தலையை துண்டிக்க எத்தனிக்கும் போது காளி தோன்றுகிறாள்.அப்போது அவன் தன்னை முழுமையாக மாற்றும் படி கெஞ்சுகிறான். காளி அவனை முழு குதிரையாக மாற்றுகிறாள்.
கிரிஷ் கர்னாடின் முடிவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு கதை ஒரு முழுமையைத் தருகிறது(End With Completeness).மறுப்பவர்களுக்கு கதை முழுமையற்றதாக (End with Lack) இருக்கிறது. அதை தொடர்வது வாசகர்களின் desire.
வேதாளக் கதை being-ன் குறையைப் பற்றி பேசாமல் முடிகிறது.
தாமஸ் மன் கதையில் being முழுமையடையாமல் (Incompleteness) குறையுடனும் (Lack), ஆசையுடனும்(Desire) மரணத்தில் முடிகிறது.
கிரிஷ் கர்னாடின் கதையில் Hayavadana வை குதிரையாக மாற்றி உயிர் வாழ விடுகிறார். Hayavadanaன் மனநிலையை வாசகர்களின் முடுவுக்கே விட்டுவிடுகிறார்.
இறுதியாக மனிதன் (Being) பிறப்பிலிருந்து மரணம் தொடர்ந்து பல ‘now’ களை சந்தித்துக் கொண்டு மாறிக் கொண்டே இருக்கிறான் மரணிக்கிறான். ஆனால் இந்த பிரதிகளுக்கு நேரத்தால் எந்த தொடர்பும் இல்லை.அதனால் பிரதிகளுக்கு மரணம் என்பது கிடையாது.
இந்த கதைகள் ஒவ்வொரு முறை வாசிக்க படும்போதும், நினைவு கூறப்படும் போதும் மனிதனில் புதிய விளைவை உண்டு பண்ணுகிறது.புதிய கதைகளை உருவாக்குகிறது. இந்த பிரதிக்கு முடிவு என்ற ஒன்று கிடையாது, அதனால் முழுமையும் கிடையாது. அதனடிப்படையில் ஒரு பிரதியை ஒரு ஒட்டு மொத்த now களின் விளைவாக Consolidate ஆக பார்க்கலாம்.
இந்த மூன்று கதைகளையும் தனி தனி பிரதியாக காணாமல், மூன்றுமே ஒரே காலநதியின் வெவ்வேறு படித்துறைகள் எனலாம்.
காலநதிக்கு முடிவில்லை!